ஈஸ்டரின் பின்னணியிலான 90 வீத குற்றச்சாட்டுகள் போலியானவை: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Monday, 22 July 2019

ஈஸ்டரின் பின்னணியிலான 90 வீத குற்றச்சாட்டுகள் போலியானவை: பொலிஸ்


ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டு பெருமளவு கைதுகளும் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்தன. எனினும் அக்காலப் பகுதியில் இக்கைதுகளுக்குக் காரணமாக அமைந்த 90 வீதமான தகவல்கள் போலியானவை எனவும் வேண்டும் என்றே சோடிக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.



தாக்குதலின் பின்னான விசாரணைகளில் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக அரச உயர் மட்டத்துடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பொலிசார் இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், இதன் பின்னணியில் சில தனி நபர்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள், ஊடகங்களிலும் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவை அடிப்படை ஆதாரங்களற்றவை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment