1970 - 1980 காலப்பகுதி வரை மிகவும் அன்யோன்யமாக வாழ்ந்து வந்த இலங்கை முஸ்லிம் சமூகம் 90களின் பின் அந்நியப்பட்டு விட்டதாக தெரிவிக்கிறார் நவின் திசாநாயக்க.
சவுதி அரேபியாவுடன் தொடர்பேற்பட்ட பின்னரே பெருமளவு முஸ்லிம்கள் தம்மை இவ்வாறு பிரித்தறியத் துவங்கியதாகவும் இதற்கெதிரான போராட்டம் அவசியப்படுவதைத் தானும் உணர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அடிப்படையில் இலங்கையரை சவுதி அரேபியாவுக்கு அனுப்புவதைத் தவிர்க்கக் கூடிய அதிகாரம் தனக்கிருந்தால் தான் உடனடியாக அதனைச் செய்யத் தயங்கப் போவதில்லையெனவும் நவின் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment