முன்னாள் பாதுகாப்பு செயலார் ஹேமசிறி பெர்னான்டோவிடம் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 9 மணி நேர விசாரணை நடாத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் குறித்த பதவி வழங்கப்பட்டிருந்த அவர் ஈஸ்டர் தாக்குதலையடுத்து ஏற்பட்ட சூழ்நிலையில் நிர்ப்பந்தத்தின் பேரில் பதவி விலகியிருந்தார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக ஹேமசிறி மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விசாரிக்கப்பட்டு வருவதுடன் ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment