ரவுப் ஹக்கீம் வீட்டிலிருந்து 6 மில்லியன் ரூபா மாயம்: பொலிஸ் விசாரணை - sonakar.com

Post Top Ad

Monday, 29 July 2019

ரவுப் ஹக்கீம் வீட்டிலிருந்து 6 மில்லியன் ரூபா மாயம்: பொலிஸ் விசாரணை


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் வீட்டிலிருந்து 6 மில்லியன் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.


திருமதி ஹக்கீமின் முறைப்பாட்டின் பின்னணியில் கொழும்பு மத்திய பிரிவின் பொலிஸ் அத்தியட்சர் நிஷாந்த டி சொய்ஸாவின் ஆலோசனைக்கு அமைய கருவாத்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பின்னணியில் வீட்டுப் பணியாளர்களை தீவிரமாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment