ஈஸ்டர் தினம், ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலில் காயமுற்ற வழக்கறிஞர் ஒருவர் அரசாங்கத்திடம் 50 கோடி ரூபா இழப்பீடு கோரி அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்துள்ளார்.
டிகரி பண்டார ஏக்கநாயக்க என அறியப்படும் வழக்கறிஞரே இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளதுடன் ஈஸ்டர் தாக்குதல் திட்டத்தை அரசாங்கம் முழுமையாக அறிந்திருந்தும் நடவடிக்கையெடுக்காததன் விளைவிலேயே தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
அண்மைய நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளின் போது வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் அரச உயர் மட்டங்கள் உளவுத்தகவல்களை முன் கூட்டியே அறிந்திருந்தும் தாக்குதலை தவிர்க்கத் தவறியுள்ளமை புலனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment