முன்னொரு காலத்தில் இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியென இரு பெரும் கட்சிகளே இருந்தன. ஆயினும் தற்காலத்தில் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கூட்டணி அவசியப்படுகிறது என தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
இதன் பின்னணியில் ஓகஸ்ட் 5ம் திகதி தேசிய ஜனநாயக முன்னணியெனும் கூட்டணிக் கட்சியை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க இன்று அவிஸ்ஸாவெலயில் வைத்து தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலிலும் கூட்டணி ஊடாகவே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment