இன்னும் நான்கு மாதங்களில் ரிசாத் பதியுதீன் போன்றவர்களின் நிழலும் படாத அரசொன்று அமையும் என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
வஹாபிய அடிப்படைவாதத்தை இலங்கையிலிருந்து துடைத்தெறிவதற்கான ஆரம்பம் எனும் தொனிப்பொருளில் நுகேகொடயில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் பொதுக் கூட்டத்தில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் சனத்தெகை விரைவில் 20 வீதத்தை எட்டிவிடும் எனவும் 2021 சனத்தொகைக் கணிப்பீட்டின் படி ஆகக்குறைந்தது 12 வீதமாக உயரும் எனவும் தெரிவிக்கும் கம்மன்பில, இதன் பின்னணி அபாயகரமானது எனவும் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரிப்பது சிங்கள இனத்தின் இருப்புக்கு ஆபத்தானது எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment