கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை எதிர்வரும் 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் தமது கடமைகளை சரி வரச் செய்யத் தவறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இவ்வடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரதிவாதிகள் தமது மறுப்பை 18ம் திகதிக்குள் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு விசாரணை 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment