இனவாத குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் பௌத்த பிக்குகளில் 90 வீதமானோர் சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானவர்கள் என அண்மையில் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்த கருத்தின் பின்னணியில் அவர் 24 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கோர வேண்டும் என காலக் கெடு விதித்துள்ளது பல்வேறு பௌத்த பிக்குகள் அமைப்புகள்.
சிறு வயதில் பிக்குகளாக சேர்ந்து கொள்வோர் பலர் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாவதாகவும் அவ்வாறு பாதிக்கப்பட்டோரே கடும்போக்குவாத பிக்குகளாக வலம் வந்து கொண்டிருப்பதாகவும் ரஞ்சன் தெரிவித்திருந்திருந்தார்.
இந்நிலையில், அவர் அவ்வாறு தெரிவித்தமைக்கு ஞானசார உட்பட பல்வேறு பௌத்த துறவிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு வெளியிட்டு வருவதுடன் 24 மணித்தியாலத்துக்குள் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர். அத்துடன் ரஞ்சனுக்கு எதிராக சிங்ஹலே அமைப்பினால் பொலிஸ் முறைப்பாடொன்றொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment