ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்பிலிருந்ததாகக் கூறி நாவலபிட்டி, கொரகஓய பகுதியில் 22 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சஹ்ரானுடைய விளக்க வகுப்புகளுக்குச் சென்று வந்ததாக குறித்த நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சந்தேகத்தில் பல இளைஞர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment