தென் ஆபிரிக்கா செல்வதற்காக கொல்லுபிட்டி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பாக். பிரஜையொருவர் 2 கிலோ ஹெரோயினுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஞாயிறு தினமே குறித்த நபர் கொழும்பு வந்துள்ளதாகவும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு இன்று நீதிமன்ற அனுமதி பெறப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment