நாடாளுமன்றத்தைத் தாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அவசர அழைப்பு பிரிவுக்கு போலியான தகவல் வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
புறக்கோட்டை பள்ளிவாசல் ஒன்றில் எட்டு முஸ்லிம்கள் நாடாளுமன்றைத் தாக்குவதற்குத் தயாராக இருப்பதாக தகவல் கொடுத்த 53 வயது நபர் ஒருவரே எல்லே பகுதியில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தகவலையடுத்து பொலிசார் குறிப்பிடப்பட்ட பள்ளிவாசலுக்குள் பொலிசார் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment