எதிர்வரும் 10ம் திகதி நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தினமும் அவர் சமூகமளிக்காவிடின் அன்றே அவருக்கு எதிரான நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தான் இவ்வாறு ஒரு விசாணைக்கு முகங்கொடுக்கப் போவதில்லையென தெரிவிக்கும் தயாசிறி, தாஜ் சமுத்ராவில் குண்டு வெடிக்காததன் பின்னணியில் முக்கிய காரணம் இருப்பதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment