நிந்தவூர் -அல்லிமூலை பகுதியில் வேகமாக வந்துகொண்டிருந்த இராணுவ வாகனம் வீதியின் குறுக்கே பாய்ந்த ஆடொன்றினை பாதுகாக்க முற்படுகையில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 10 இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் பல வைத்தியசாலையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை(6) 2 மணியளவில் விசேட கடமைக்காக அக்கரைப்பற்று பகுதியில் இருந்து கல்முனை நோக்கி செல்லும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது இவ்விபத்தில் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் விபத்து நடந்த இடத்தில் இருந்து 15 அடி வழுக்கிய நிலையில் வயல் வெளியோரம் குடைசாய்ந்துள்ளது.
இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற 10 இராணுவ வீரர்களும் காயமடைந்த நிலையில் பல்வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மூன்று இராணுவ வீரர்களும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மூன்று இராணுவ வீரர்களும் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் 2 இராணுவ வீரர்களும் மட்டக்களப்பு 1 காரைதீவு 1 என அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சம்பத் கூரகொட நந்தசிறி இசந்தரூபன் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் பண்டாரஇ குலதுங்கஇ விஜயகோன் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் ஜயவர்த்தனஇ கமகே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சதுரங்க இராணுவ வீரரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட இராணுவ வீரர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.
அத்துடன் குறித்த விபத்தினை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களின் கமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டு படங்கள் இராணுவ வீரர்களினால் அழிக்கப்பட்டன.சில ஊடகவியலாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தல் இராணுவ அதிகாரிகளினால் விடுக்கபட்டது.
மேற்குறித்த இராணுவ வீரர்கள் அனைவரும் வெலிகந்தை இராணுவ விசேட படையணியனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-பாறுக் ஷிஹான்
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment