1000 வருடங்களுக்கு முன்னர் முதலாம் பராக்கிரமபாகுவின் காலத்திலேயே திருகோணமலையிலிருந்து பொலன்நறுவைக்கு கப்பல் பயணங்கள் இடம்பெற்றதாகவும் அவ்வாறு அக்காலத்திலேயே உருவாக்கப்பட்ட தொழிநுட்பத்தை இன்றும் நவீன உலகால் விஞ்ச முடியாமல் உள்ளதாகவும் தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
புராண காலத்திலேயே விவசாயம், தொழிநுட்பத்தில் இலங்கை சிறந்து விளங்கியதோடு பொலன்நறுவயிலிருந்து யுத்த கப்பலில் ஏறிச் சென்றே பராக்கிரமபாகு மன்னன் வெளிநாடுகளோடு போர் தொடுத்திருந்ததாகவும் மைத்ரிபால சிறிசேன நினைவூட்டியுள்ளார்.
முதலாம் பராக்கிரமபாகு மன்னன் தென்னிந்தியாவில் பாண்டிய மன்னனுடன் மற்றும் பர்மாவின் ஒரு பகுதியுடனும் அக்காலத்தில் யுத்தத்தில் ஈடுபட்டதாக சிங்கள வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனை மேற்கோள் காட்டியே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment