நல்ல நேரத்தில் தமது கட்சிக்கான ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை அறிவிக்கப் போவதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.
ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளரை அறிவிக்காத நிலையில் தாம் அவசரப் படத் தேவையில்லையென பெரமுன இதுவரை தெரிவித்து வந்தது. இதேவேளை எந்தக் கட்சிக்கும் அவசரமில்லையென்பதால் தாம் ஜனாதிபதி தேர்தல் பற்றி அலட்டிக் கொள்ளவில்லையென மைத்ரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தாம் நல்ல நேரம் பார்த்து வேட்பாளரை அறிவிக்கப் போவதாக பெரமுன தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment