பொது சேவை ஊழியர்களின் ஆடை விவகார சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் செலை மற்றும் ஒசாரி ஆடைகளும் இலங்கைக்கு முஸ்லிம்களாளேயே கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.
பாரசீகம், மத்திய கிழக்கு ஊடாக இந்தியாவை வந்தடைந்து அதனூடாக இலங்கையை வந்தடைந்ததே இவ்வகை ஆடைக்கலாச்சாரம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து - இசைந்து ஒரே வகையான சூழலில் வாழ்வதற்கான அறிவுரைகளை சமூகத்துக்கு வழங்க வேண்டும் என மௌலவிமார்களிடமும் தாம் வேண்டிக்கொள்ளவதாக எஸ்.பி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment