ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் நாடாளுமன்ற தெரிவுக்குழு நடாத்தி வரும் விசாரணையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி, குறித்த சந்தர்ப்பத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளதாக இதுவரையான சாட்சியங்களின் அடிப்படையில் கருத்து நிலவுகிறது.
இந்நிலையிலேயே பிரதமரின் பங்கு மற்றும் இருவருக்குமிடையிலான விரிசலினால் இடம்பெற்ற அலட்சியம் தொடர்பில் மேலதிக விபரங்களைக் கண்டறியும் வண்ணம் இவ்விசாரணைகளை நடாத்த முயல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment