![eqZbkG1](https://i.imgur.com/eqZbkG1.jpg?1)
தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சந்தேக நபர் ஒருவரை விடுவிப்பதற்கு ஹொரவபொத்தான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் லஞ்சம் கொடுக்க முனைந்த நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அப்துல் மஜீத் முஹமத் நியாஸ் எனும் சந்தேக நபரை விடுவிப்பதற்காகவே ஷிபான் என அறியப்படும் 26 வயது நபர் இவ்வாறு லஞ்சம் கொடுக்க முனைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் விளக்கமறியல் எதிர்வரும் 18ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment