தற்கொலைதாரி சஹ்ரானின் தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டில் தெஹிவளையில் வசித்து வந்த 53 வயது தொலைத்தொடர்பு பொறியியலாளர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பற்றி ஹொரவபொத்தான பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பின்னணியில் தெஹிவளை பொலிசார் இக்கைதினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தியாவிடமிருந்து குறித்த குழுவினர் பற்றி கிடைக்கப்பெற்றிருந்த உளவுத்தகவல்கள் அரச உயர் மட்டத்தினால் உதாசீனம் செய்யப்பட்டு வந்துள்ளதன் பின்னணியில் தற்போதைய நெருக்கடி சூழ்நிலை முன் கூட்டியே திட்டமிடப்பட்தா எனும் சந்தேகம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment