தம்முள் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட போது அதனை ஒற்றுமையாக ஒன்றிணைந்து எதிர்த்ததுடன் பதவிகளை துறந்ததன் மூலம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையால் உயர்ந்து நிற்பதாகவும் அதனூடாக வெறுப்புணர்வை வெறுப்புணர்வால் எதிர்கொள்ளக் கூடாது என்கிற பௌத்த தர்மத்தை நிலை நாட்டச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் அமைச்சர் மங்கள சமரவீர.
தொடர்ச்சியான நடுநிலை கருத்துக்களை வெளியிட்டு வரும் மங்கள, ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் இருப்பின் அதனை விசாரிப்பதற்கான நெறிமுறை இருக்கும் போது, அதனைத் தவிர்த்து ஊடகங்கள் ஊடாகவும் நாடாளுமன்றிலும் வெறுமனே பேச்சளவில் பிரச்சாரம் செய்வதையே தான் காண்பதாகவும் இவ்வாறான நேரத்தில் முஸ்லிம்கள் ஒற்றுமையை வெளிக்காட்டியதன் ஊடாக உயர்வான இடத்தைப் பிடித்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
கடந்த வருடம் ஒக்டோபரில் பெரமுனவின் கோரிக்கைகளை நிராகரித்து அரசுடன் தொடர்ந்தும் இணைந்திருந்ததன் காரணமாகவே ரிசாத் பதியுதீன் இலக்கு வைக்கப்படுவது நாடறிந்த விடயம் எனவும் மங்கள சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment