முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது அனைத்து பௌத்த நிகாயக்களின் சங்கமான மஹா சங்க சபா.
முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுமத்தப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வழி விடும் வகையில் இரு ஆளுனர்கள் உட்பட 9 அமைச்சுப்பதவிகளில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை கைவிட்டிருந்தனர்.
ஆளுனர்களாகவிருந்த அசாத் சாலி, ஹிஸ்புல்லா மற்றும் ரிசாத் பதியுதீன் மீது முறைப்பாடுகள் இருப்பின் அவற்றைப் பெறுவதற்கு விசெட பொலிஸ் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், இனவாத பிரச்சாரமே மேலோங்கியிருந்தது தெளிவாகி வருகின்ற அதேவேளை, மகா சங்க இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment