அமைச்சரவையிலிருந்து பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற இருக்கைகள் தொடர்பில் மஹிந்த அணியினர் இன்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
நாடாளுமன்றில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இருக்கைகள் சற்று வசதி கூடியனவையெனவும் அதில் அவர்கள் தொடர்ந்தும் இருப்பதற்கு தகுதியுள்ளதா எனவும் கெஹலிய ரம்புக்வெல கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த லக்ஷ்மன் கிரியல்ல, அவர்கள் கட்சித் தலைவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளதுடன் ரிசாத் பதியுதீனும் ஒரு கட்சியின் தலைவர் என விளக்கம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment