முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் விசமப் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் அமைச்சரவையில் அங்கம் வகித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜினாமாவை ஒப்படைத்துள்ளனர்.
இப்பின்னணியில், தாம் தொடர்ந்தும் பின் வரிசை உறுப்பினர்களாக (அரச ஆதரவு) நாடாளுமன்றில் செயற்படவுள்ளதாகவும், ஒரு மாத காலத்துக்குள் தேவையான விசாரணைகள் முடியும் என எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, விசாரணைகளை முறையாக நடாத்தும் பொருட்டு ஒத்துழைக்கவே இரு ஆளுனர்களான அசாத் சாலியும் ஹிஸ்புல்லாவும் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment