எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தரப்பிலிருந்து தனியான வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவிக்கிறது.
அக்கட்சி சார்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல் நாடளாவிய ரீதியிலான பிரச்சார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படவுள்ளதாகவும் தமது அரசியல்பீடத்திலிருந்து ஒருவரே இவ்வாறு வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகவும் ஜே.வி.பியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment