நேற்றைய தினம் தமது அமைச்சப் பதவிகளைக் கைவிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர்கள் என்ற வகையில் கிடைக்கப் பெற்ற சிறப்புச் சலுகைகள், அவர்கள் ஊடாக வழங்கப்பட்ட நியமனங்களுக்கு என்னவாகும்? என கேள்வியெழுப்பியுள்ளது மஹிந்த அணி.
குறித்த ஒன்பது பேரும் முழுமையாக இராஜினாமா செய்யவில்லையெனவும் ஒரு மாத காலத்திற்கே பதவியிலிருந்து விலகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இந்த ஒரு மாத காலத்திற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள், வாகனங்கள், பாதுகாப்பு மற்றும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சு மட்ட நியமனங்களுக்கெல்லாம் என்னவாகும் என அரசு விளக்க வேண்டும் என மஹிந்த அணி சார்பில் ரஞ்சித் சொய்சா கேள்வியெழுப்பியுள்ளார்.
முஸ்லிம் அரசியல்வாதிகளின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வழி வகுக்கும் வகையில் அமைச்சு மற்றும் ஆளுனர் பதவிகளிலிருந்தும் முஸ்லிம் அரசியல்வாதிகள் விலகிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment