ஈஸ்டர் தினம் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் தொடர்பில்லையென அண்மையில் மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம் உட்பட அரசியல்வாதிகள் பலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தாமும் அவ்வாறே நம்புவதாக தெரிவிக்கும் அமைச்சர் மனோ கணேசன், அவ்வாறாயின் இது இலங்கையிலேயே உருவான அடிப்படைவாத குழு என்பதால் ஐ.எஸ் ஈடுபாட்டை விட பயங்கரமான சூழ்நிலைக்கு நாடு முகங்கொடுப்பதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, தாக்குதலை நடாத்திய நபர்கள் அதன் பின்னரே ஐ.எஸ். அமைப்புக்காகவே தாம் தாக்குதல்களை நடாத்தியதாக கோரிக்கை விடுத்ததாகவும் அதன் பின்னணியிலேயே 48 மணி நேர தாமதத்தின் பின் குறித்த அமைப்பு உரிமை கோரியதாகவும் மனோ கணேசன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment