முஸ்லிம் ஆளுனர்கள் இருவர் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பதவி விலக வேண்டும் என நான்கு நாட்களாக கண்டியில் உண்ணாவிரதமிருந்த அத்துராலியே ரதன தேரர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை நேற்று காலையில் பரிசோதித்திருந்த பேராதனை போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் அவர் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே அவருக்கு தற்போது இவ்வாறு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ஒரு புறத்தில் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வந்த நிலையில் மறு புறத்தில் பல இடங்களில் கடும்போக்குவாதிகள் ஒன்றுகூடல்கள் இடம்பெற்று வந்த சூழ்நிலையிலேயே முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒட்டு மொத்தமாக இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment