பாலியல் அத்துமீறல்: Dr தயாநந்தவுக்கு அவுஸ்திரேலியாவில் சிறை! - sonakar.com

Post Top Ad

Saturday, 22 June 2019

பாலியல் அத்துமீறல்: Dr தயாநந்தவுக்கு அவுஸ்திரேலியாவில் சிறை!


அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமையைப் பெற்று அங்கு மருத்துவராகப் பணியாற்றி வந்த இலங்கையரான பிரியந்த பத்மிக தயாநந்த எனும் நபர் 2017ம் ஆண்டு 45 வயது பெண்ணொருவரிடம் பாலியல் அத்துமீறல் புரிந்துள்ளமை நிரூபணமாகியுள்ள நிலையில் அவருக்கு அங்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


10 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற விசாரணையில் குறித்த நபர் (49) திட்டமிட்டே பாலியல் அத்துமீறல் புரிந்துள்ளதாக கண்ட நீதிமன்றம் 3 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கியுள்ள அதேவேளை தண்டனை முடிவில் தயாநந்த நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017 செப்டம்பர் மாதம் பன்பரி வைத்தியசாலைக்கு வந்திருந்த குறித்த பெண் மீது மோகம் கொண்ட குறித்த நபர், பின்னர் குறுந்தகவல்கள் ஊடாகவும் முறைகேடான செய்திகளைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment