குருநாகல மருத்துவர் ஷாபி விவகாரம் தொடர்பில் 750க்கும் அதிகமானோரிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துக்குவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான குறித்த நபருக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் கருத்தடை செய்ததாக பிரச்சாரப்படுத்தி அதற்கு ஆதரவாக சாட்சியங்கள் கோரப்பட்டிருந்தது.
இப்பின்னணியில் ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில் 750 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment