சர்ச்சைக்குள்ளாகியுள்ள குருநாகல் வைத்தியர் ஷாபிக்கு எதிராக நேற்று (2) இரவு வரை 600 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கிறது.
சந்தேகத்துக்கிடமான வகையில் சொத்துச் சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட குறித்த மருத்துவருக்கு எதிராக சட்டவிரோத கருத்தடை குற்றச்சாட்டு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டதோடு முறைப்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இப்பின்னணியிலேயே தற்போது 600 முறைப்பாடுகள் உள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றமையும், இவ்விவகாரத்தை விசாரிக்கவென சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment