Dr ஷாபிக்கு எதிராக 421 பெண்கள் CIDல் வாக்குமூலம் - sonakar.com

Post Top Ad

Thursday, 6 June 2019

Dr ஷாபிக்கு எதிராக 421 பெண்கள் CIDல் வாக்குமூலம்



சட்டவிரோத கருத்தடை சர்ச்சையில் சிக்கியுள்ள குருநாகல் மருத்துவர் ஷாபிக்கு எதிராக 421 பெண்கள் இதுவரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலமளித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



700க்கும் அதிகமானோர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் முறையிட்டிருந்த நிலையில் இவ்வாறு சி.ஐ.டியினரிடம் வாக்குமூலமும் வழங்கப்பட்டுள்ளது. 

முதலில் சந்தேகத்துக்குரிய வகையில் சொத்துக் குவித்தததாகக் கூறி கைது செய்யப்பட்ட ஷாபிக்கு எதிராக சட்டவிரோத கருத்தடைக் குற்றச்சாட்டு பிரச்சாரப்படுத்தப்பட்டு அதற்கான முறைப்பாடுகள் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment