இலங்கையில் அரபு மொழியைத் தடை செய்யப் போவதாக வெளியாகியுள்ள தகவல்களில் யதார்த்தம் இல்லையெனவும் அவ்வாறு தடை செய்வது முடியாத காரியம் எனவும் தெரிவிக்கிறார் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
சோனகர்.கொம் நேரலையில் இன்று கலந்து கொண்டிருந்த நிலையிலேயே இது பற்றி விளக்கமளித்த அவர், 20 வீத சுற்றுலாப்பயணிகள் மத்தியகிழக்கிலிருந்தே வருவதாகவும் இந்நிலையில் அரபு மொழியை இலங்கையில் தடை செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலையடுத்து இடம்பெற்று வரும் சோதனை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு ஊகங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் இர்பான் இக்பால் மேற்கொண்டிருந்த முஜிபுர் ரஹ்மானுடனான நேரலையை இங்கு காணலாம்:
சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் இர்பான் இக்பால் மேற்கொண்டிருந்த முஜிபுர் ரஹ்மானுடனான நேரலையை இங்கு காணலாம்:
No comments:
Post a Comment