இனவாதிகளின் அழுத்தத்துக்கு மத்தியில் அமைச்சரவையில் அங்கம் வகித்த முஸ்லிம் உறுப்பினர்கள் இன்று இராஜினாமா செய்திருப்பது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ சுமந்திரன்.
இனவாதிகளின் பிடியில் கடந்த காலத்தில் தமிழ் சமூகம் சிக்கித் தவித்தது போன்று தற்போது முஸ்லிம் சமூகம் மாட்டிக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இது தொடரும் என்பதால் அனைவரும் ஒற்றுமைப் பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சு பதவிகளை வகித்த 9 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரு முஸ்லிம் ஆளுனர்கள் இன்றைய தினம் பதவி துறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment