நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதாக தெரிவிக்கும் அத்துராலியே ரதன தேரர் முழு தேக ஆரோக்கியத்துடன் நலமாக இருப்பதாக தெரிவிக்கின்றர் மருத்துவர்கள்.
பேராதனை போதனா வைத்தியசாலை மருத்துவர்ள் அவ்வப்போது குறித்த தேரரை பரிசோதித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று முற்பகல் பரிசோதித்த மருத்துவர்கள் தேரர் முழு தேக ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும் இன்னும் 3 தினங்களுக்கு உண்ணாவிரதம் தொடர்ந்தால் தேரரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment