மஹிந்த ராஜபக்சவுக்கு புதிதாக ஒரு குண்டு துளைக்காத காரினைப் பெற்றுக்கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணங்கியுள்ள போதிலும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தடுப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
கூட்டாட்சி பொறுப்பேற்ற புதிதில் செலவீனங்களைக் குறைப்பதாகக் கூறி பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் முன்னைய அரசில் உபயோகிக்கப்பட்ட வாகனங்களையே பாவிக்கப் போவதாகவும் அமைச்சர்கள் தெரிவிக்க, ஜனாதிபதி மாளிகைகளும் வேண்டாம் எனவும் பிரச்சாரப்படுத்தப்பட்டிருந்தது.
காலப்போக்கில் நிலைமை வெகுவாக மாறியுள்ளதுடன் மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தனது பாதுகாப்புக்கென பிரத்யேகமாக பாரிய படையணி மற்றும் வாகனங்களையும் உபயோகித்து வருகிறார். இந்நிலையில், மஹிந்த ராஜபக்சவுக்கு புதிய குண்டு துளைக்காத வாகனம் ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment