கடந்த வருடம் ஒக்டோபரின் பின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களுக்கு நான் வரக்கூடாது என ஜனாதிபதி உத்தரவிட்டதாக சாட்சியமளித்துள்ளார் கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர.
இத்தகவல் தனக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஊடாக தரப்பட்டதாகவும் இன்றைய தினம் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்கையில் பூஜித தெரிவித்துள்ளார்.
ஏலவே தீவிரவாதிகள் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே கை விட நேர்ந்ததாக பூஜித தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment