ஹிஸ்புல்லாவிடம் 'அதை' கேட்க மறந்து விட்டோம்: அஷு மாரசிங்க - sonakar.com

Post Top Ad

Monday, 17 June 2019

ஹிஸ்புல்லாவிடம் 'அதை' கேட்க மறந்து விட்டோம்: அஷு மாரசிங்க


ஈஸ்டர் தாக்குதலையடுத்து மறுதி னம் கல்குடா பகுதியில் சவுதி அரேபிய பிரஜைகளை அப்போதைய கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் சந்தித்தமை குறித்து வினவ நாடாளுமன்ற தெரிவுக்குழு மறந்து விட்டதாக தெரிவித்துள்ளார் தெரிவுக்குழு உறுப்பினர் அஷு மாரசிங்க.



இது பற்றி சிங்கள ஊடகங்கள் கேள்வியெழுப்பியுள்ள நிலையிலேயே அஷு இவ்வாறு பதிலளித்துள்ளார். இதேவேளை, குறித்த விவகாரம் உட்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்விடம் 8 மணி நேர விசாரணை அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நடாத்தப்பட்டிருந்தது.

இதன் பின்னர், தாம் முதலீட்டாளர்களையே சந்தித்ததாகவும் வேறு எந்த பின்னணியும் இல்லையெனவும் ஹிஸ்புல்லா விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment