கிரிந்த, யால கடற்பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கடலில் மூழ்கி அதில் இருவர் உயிரிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
நுவரெலிய பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றே இவ்வாறு அலையிழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மூழ்கியுள்ள அதேவேளை தந்தையும் ஒரு மகளும் உயிரிழந்துள்ளதாகவும் தாயும் இன்னொரு மகளும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தெபரவேவ வைத்தியசாலையிலேயே சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment