சஹ்ரானை கண்காணித்து வந்த நிலையிலேயே கைதானேன்: நாலக டி சில்வா - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 June 2019

சஹ்ரானை கண்காணித்து வந்த நிலையிலேயே கைதானேன்: நாலக டி சில்வா



சஹ்ரானது முகநூல் நடவடிக்கைகள், பிரச்சார காணொளிகளை அவதானித்து, தனிப்பட்ட ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் தான் அது குறித்து செயற்பட்டு வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் முன்னா பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா.


மைத்ரி கொலை வழக்கில் கைதாகி சிறையிலடைக்கப்பட்டிருந்த அவர், தனது கைதின் பின் சஹ்ரான் தொடர்பிலான விசாரணைகள் கைவிடப்படும் என எதிர்பார்க்கவில்லையெனவும் ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியளிக்கையில் இன்று தெரிவித்துள்ளார்.

இந்திய உளவு நிறுவனங்கள் தொடர்ச்சியாக தகவல்கள் வழங்கியும் இலங்கையில் அது புறக்கணிக்கப்பட்டுள்ளமை நிரூபணமாகியுள்ள நிலையில், மைத்ரிபால சிறிசேனவினாலேயே தீவிரவாதிகள் பற்றிய விசாரணைகள் கைவிடப்பட்டதாக பூஜித ஜயசுந்தர அண்மையில் நீதிமன்றில் தாக்கல் செய்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment