கல்முனை: தேரரின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது - sonakar.com

Post Top Ad

Monday, 17 June 2019

கல்முனை: தேரரின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது


அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல்  சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்  பிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், இதில் கலந்து கொண்ட கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி  ரன்முத்துகல சங்கரத்ன தேரர்  மோசமடைந்து வருகிறது. இதனால் முதலுதவி சிகிச்சை தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி  ரன்முத்துகல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ சிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள்,  கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அளகக்கோன் விஜயரெட்னம் ,சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். 

இவர்களுடன் சமூக அமைப்புக்கள், கல்முனை வாழ் தமிழ் இளைஞர்களும் இணைந்து போராட்டத்தில் இணைந்துள்ளனர். 

-பாறுக் ஷிஹான்

1 comment:

ஜெயபாலன் said...

மதிப்புக்குரிய அம்பாறை மாவட்ட பிரதிநிதி ஹாரிஸ் அவர்களுக்கு. நான் பலதடவை கோரியதுபோலவே மீண்டும் கோருகிறேன். ஊர்வாதமா முஸ்லிம்களின் நலன்களா என்பதையிட்டு நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டிய தருணமிது. தயவு செய்து கல்முனை தமிழ் சம்மாந்துறை மற்றும் கல்முனைக்குடி ஊர்த் தலைவர்களை கலந்தாலோசியுங்கள். தயவு செய்து அம்பாறை மாவட்ட தமிழர் பிரதிநிதி கோடீஸ்வனை அழைத்து பேசுங்கள். தவுசெய்து உங்கள் தலைவர் தேழர் ரவூப் ஹஹீம் ஊடாக தமிழர் தலைவர் சம்பந்தனோடும் பேசி இறுதிமுடிவை எடுங்கள். அரசியல் ரீதியாக நீங்கள் அறிவிப்பதே சரியான ராசதந்திரமாக இருக்கும். அது எல்லைகளில் சின்ன சின்ன விட்டுக்கொடுப்புகள் செய்யவும் இடம் தருவதாக இருக்கும். முஸ்லிம் நல்லுறவை விடுங்கள். தமிழ் முஸ்லிம்களின் மாகாணசபை மற்றும் நாடுதழுவிய பிரச்சினைகளில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நலன்களையாவது கருத்தில் கொள்ளுங்கள். எல்லைகளில் நியாயமான மாற்றங்களே உங்கள் கோரிக்கையாக இருந்தால் அதுபற்றிய நியாயங்களை முன்வையுங்கள். நாங்களும் அழுத்தம் தரலாம்

Post a Comment