![](https://i.imgur.com/WE9lIsb.jpg?1)
நாட்டின் பாதுகாப்பு பெருமளவு கேள்விக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கும் மல்வத்து பீட அநுநாயக்கர் நியங்கொட விஜிதசிரி தேரர், தலதா மாளிகை தாக்குதலுக்குள்ளாகலாம் என்ற அச்சமும் நிலவுவதாக தெரிவிக்கிறார்.
அரச உயர் மட்டத்திற்குள் தொடரும் விரிசல்களினால் தேசிய பாதுகாப்பு முற்று முழுதாகக் கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் ஓகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டுள்ள பெரஹரவின் போது அசம்பாவிதங்கள் நடந்து விடுமோ என்ற அச்சம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
இப்பின்னணியில் பொது மக்கள் கண்காணிப்புக் குழுவொன்று அவசியப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment