அரச நிறுவனங்களில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் சேலை அல்லது ஒசரி மாத்திரமே அணிய வேண்டும் என முன்னர் வெளியிடப்பட்டிருந்த சுற்று நிருபத்தினை மாற்றி, தலை மூடுதல் அனுமதிப்பதற்கு நேற்றைய தினம் அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ள போதிலும் முகம் மூடுதல் எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க முடியாது என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்றைய தினம் அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பின் தேவை கருதி அதற்கேற்ப அரச ஊழியர்களது ஆடை விவகாரங்களும் இருக்க வேண்டும் என அவர் இதன் போது தெரிவித்திருந்த நிலையில், பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஆடை நிர்ப்பந்தம் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அபாயா மற்றும் ஹிஜாப் அணிவதற்கான தடை நீங்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
நேற்றைய அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் அறிக்கையில் இவ்விடயம் இறுதி அம்சமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
Who was working at the government offices with face cover?
Post a Comment