முஸ்லிம்கள் தொடர்பில் தான் தெரிவித்த கருத்துக்கள் திரிபு படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அஸ்கிரிய பீடத்தின் வரகாகொட ஞானரத்ன மகாநாயக்க தேரர்.
ஐ.தே.க - முஸ்லிம் சமூகத்துக்கிடையிலான உறவு பற்றியே தாம் கருத்து தெரிவித்ததாகவும், பொதுவிலே நிலவும் கருத்துக்கள் சிலவற்றை சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கும் அவர், அது தனது நிலைப்பாடில்லையென தெரிவிக்கிறார்.
முஸ்லிம்களின் வர்த்தகம் புறக்கணிக்கப்பட வேண்டும், முஸ்லிம்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் போன்ற கருத்துக்களன்றி அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment