அத்துராலியே ரதன தேரரின் உண்ணாவிரத போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அளுத்கமயிலும் பிக்குகள் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது. இப் பின்னணியில் பஸ் தரிப்பு நிலையப் பக்கமும் எதிராகவும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்கி விசாரிக்கக் கோரி ரதன தேரர் உண்ணாவிரதத்தில் குதித்திருந்த நிலையில் மட்டக்களப்பில் பெரமுனவின் வியாழேந்திரனுடன் சில துறவிகளும் இவ்வாறே அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயலில் இறங்கியிருந்தனர்.
இந்நிலையில், தற்போது அளுத்கம நகரிலும் உண்ணாவிரத போராட்டத்துக்குத் தயாராகி வருகின்றமையும் நாளை மதியம் 12 மணிக்குள் கோரிக்கைக்கு சாதகமான முடிவு கிடைக்காவிட்டால் நாடளாவிய ரீதியில் பல விடயங்கள் அரங்கேறும் என ஞானசார தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment