ஜுலையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 June 2019

ஜுலையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்



எதிர்வரும் ஜுலை 9 மற்றும் 10ம் திகதிகளில் ஜே.வி.பியினரால் முன் வைக்கப்பட்ட அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விரைவுபடுத்தப்பட வேண்டும் என சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் லக்ஷ்மன் கிரியல்ல இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இதேவேளை, ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நீக்கக் கூடாது எனவும் அதுவும் விவாதத்துக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் விமல் வீரவன்ச இன்று சபையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment