கடந்த பொதுத் தேர்தலில் ஒன்றாகப் பணியாற்றிய போதிலும் அண்மைக்காலமாக தனித்து செயற்பட்டு வந்து, தற்சமயம் முஸ்லிம் அரசியல்வாதிகளை பதவி நீக்கக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அத்துராலியே ரதன தேரரை பார்வையிடச் சென்றுள்ளார் சம்பிக்க ரணவக்க.
நேற்றைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே சம்பிக்க இன்று கண்டி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் வெலிகடை சிறைச்சாலை சென்ற ஜனாதிபதி அப்போது சிறைக்கைதியாக இருந்த ஞானசாரவை பார்வையிட்டிருந்த நிலையில் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் இராஜினாமா செய்ததும் ஜனாதிபதியும் ரதன தேரரை பார்வையிடச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment