கட்சித் தலைவராக மஹிந்த விரைவில் பொறுப்பேற்பார்: பசில் - sonakar.com

Post Top Ad

Sunday, 23 June 2019

கட்சித் தலைவராக மஹிந்த விரைவில் பொறுப்பேற்பார்: பசில்


பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான மஹிந்த ராஜபக்ச, ஓகஸ்ட் 11 ம் திகதி இடம்பெறவுள்ள பெரமுன பேராளர் மாநாட்டில் வைத்து அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் பசில் ராஜபக்ச.


இதுவரை காலமும் ஜி.எல். பீரிஸ் கட்சியின் பினாமித்தலைவராக இயங்கி வருகின்ற அதேவேளை மஹிந்த ராஜபக்ச தன்னை தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என தெரிவித்து வருகிறார்.

இந்நிலையிலேயே போராளர் மாநாட்டில் வைத்து அவரிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment