விரைவில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்து வரும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபை, கனடா, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா என பல முனைகளிலிருந்து ஜனாதிபதியின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில் இம்முடிவு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட முடிவில்லையெனவும் தமது தரப்புக்கு இதில் உடன்பாடில்லையெனவும் ஐ.தே.க தெரிவிக்கிறது.
முதற்கட்டமாக போதைப் பொருள் வர்த்தகர்கள் நால்வருக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment