அரசியல்வாதிகளை பதவி நீக்கக் கோரி அத்துராலியே ரதன தேரர் நடாத்திக்கொண்டிருக்கும் உண்ணாவிரதத்துக்கு கார்டினல் மல்கம் ரஞ்சித் விஜயம் செய்தமை எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் செயல் என சாடியுள்ளார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.
பற்றியெரியும் வெறுப்புணர்வை மேலும் தூண்டிவிடுவது போன்றே அவரது விஜயத்தைத் தான் பார்ப்பதாக மங்கள சமரவீர விளக்கமளித்துள்ளார்.
நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரதன தேரர் இரு முஸ்லிம் ஆளுனர்கள் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பதவி நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
சரியான கருத்து தான்...
Post a Comment